"வைத்யா" என்னும் மருத்துவ மென்பொருள் உருவாக்கி பிஎஸ்ஜி மாணவர்கள் சாதனை


கோவை, பி.எஸ்.ஜி மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் "வைத்யா" என அழைக்கப்படும் மென்பொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். வைத்யா என்ற இந்த மென்பொருள் ஆதார் கார்டுகளுடன் மருத்துவத் தகவல்களை இணைத்து எளிய மற்றும் பயன்படுத்துவதற்கு வசதியாக அடக்கமான மற்றும் நாடெங்கிலும் அணுகத்தக்க ஓர் அமைப்பு ஆகும்.



இது மருத்துவமனையை மட்டுமல்லாது பரிசோதனை கூடங்களையும், மருந்தகங்களையும் இணைக்கிறது. ஆதார் எண் இல்லாதவரும் இவ்வமைப்பை பயன்படுத்தி அதன் பயன்களை அடையலாம். எனவே, இதன் மூலம் நோயாளிகளையும் மருத்துவத்திற்காக பின்தொடர வழிவகுக்கிறது.

நாட்டின் முக்கிய மருத்துவ நிலையங்கள் கணினிமையம் ஆக்கப்பட்ட தகவல் நிர்வாகங்களை பயன்படுத்தி வருகிறது. எனினும் அந்த தகவல் நோயாளிகள் மற்றும் அந்த மருத்துவமனையையும் சார்ந்து இருக்கும். தற்போதுள்ள இந்த வசதி நோயாளிகளின் மருத்துவத் தகவல்களை பரிமாற்றம் செய்ய போதிய வசதிகள் இல்லை. எனவே, நோயாளி பற்றிய அனைத்து தகவல்களையும் எந்த இடத்திலிருந்தும் அணுகத்தக்கவாறு ஒரு அமைப்பு முறை தேவைப்படுகிறது.



இதற்கு ஆதார் எண்ணானது இவ்வமைப்பு முறையை நிர்வகிப்பதில் முக்கிய தீர்வாக உள்ளது. ஒவ்வொரு இந்தியரையும் தனியாக அடையாளம் காட்டுவதற்கு வழிவகுக்கிறது. நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை ஆதாருடன் இணைப்பதால் அது நோயாளிகளின் பிரத்யேக மருத்துவத்திற்கு வழிவகுக்கிறது. 

இவை தவிர மத்திய அரசும் கணினி மயமாக்கப்பட்ட மருத்துவப்பதிவுகளை உருவாக்கி அதன் தரத்தினையும் வரையறைகளையும் நோயாளிகளின் ரகசியங்களை பாதுகாக்கும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. 

இந்த முறையினை பிஎஸ்ஜி மருத்துவ மற்றும் தொழிநுட்ப மாணவர்களான ரோஹந்தி ரவிகுலன், தயானந், காசிநாதன், பிரகாஷ், பிரகதீஸ் ஆகியோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...